
தமிழகம்
சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது – இபிஎஸ்!!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூம் எடுத்திற்கும் நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை செயலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிமுக அலுவலகம் போர்களமாக மாறியதால் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதி மற்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் தற்போது தொடங்கியுள்ளது. அப்போது இபிஎஸ் தரப்பில் சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என வாதிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் ஓபிஎஸ் தரப்பில் கட்சி அலுவலகம் ஒப்படைக்குமாறு வாதிடப்பட்ட நிலையில் கட்சி அலுவலகம் பொதுசொத்து அல்ல என்றும் கட்சியில் இருந்து பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கிவிட்டதாக வாதிடப்பட்டு வருகிறது.
