
தமிழகம்
அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் நடந்து கொண்டதன் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிலையை அகற்றக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையானது இன்று வாழ்ந்த நிலையில் காவல்துறையினர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை என்றும் மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என கூறப்பட்டு இருந்தது.
அதோடு சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை கேட்ட நீதிபதி அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும், காவல்துறை அறிக்கைக்கு பதில்மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் தரப்புக்கு நீதிபதி அவகாசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
