Connect with us

குமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

sea

தமிழகம்

குமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இயற்கை சீற்றங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு இடங்களில் சுனாமி, நிலநடுக்கம், மண்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் குமரி மாவட்டத்தில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியுள்ளது. இதனால் கடற்கரையில் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக பாறைகளில் மோதியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சுமார் 10 அடி முதல் 15 அடி உயர்ந்து அலைகள் எழுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கிருந்த சுற்றுலா பயணிகளையும் போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வராமல் இருப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய அறிவிப்பால் கடலுக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில் கீழமணக்குடி,மணக்குடி,பள்ளம்,சொத்தவிளை, கோவளம், சின்னமுட்டம்,ஆரோக்கியபுரம்,வாவத்துறை போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படுவதால் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top