
பொழுதுபோக்கு
நிகழ்ச்சி மேடையில் ஸ்கிரீன் விழுந்து விபத்து! அதிர்ச்சி வீடியோ!
சீனாவில் ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் பிரபலமான கேண்டபாப் மிரர் என்கிற நடனக்குழுவினர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை பார்க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இந்நிலையில் கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த அரங்கில் இருந்த பிரம்மாண்ட ஸ்கிரீன் அறுந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.
இதில் நடனமாடிக் கொண்டிருந்த நடனக்குழுவை சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கும் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது ஸ்கிரீன் அறுந்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் அடுத்ததாக கலந்துகொள்ள இருந்த 12 நடன நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கேபிள் அறுந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
ஸ்கிரீன் அறுந்து விழும் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர், தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள் என்பதும், இவர்களுக்கென சீனாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/strange16892330/status/1552820907114110983
