Connect with us

இனி மூக்கு, தொண்டை பத்திரம்பா.. எக்ஸ்ரே மூலம் கொரோனாப் பரிசோதனை முறையினைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து!

Untitled 72

செய்திகள்

இனி மூக்கு, தொண்டை பத்திரம்பா.. எக்ஸ்ரே மூலம் கொரோனாப் பரிசோதனை முறையினைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து!

இனி மூக்கு, தொண்டை பத்திரம்பா.. எக்ஸ்ரே மூலம் கொரோனாப் பரிசோதனை முறையினைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து!

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, சோர்வு எனப் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

கொரோனாத் தொற்று ஏற்பட்டபின்னர் மக்கள் படும் அவதியினைவிட கொரோனாத் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளும்போது படும் அவதி பெரியதாக உள்ளது.

கொரோனாத் தொற்றைக் கண்டறிய தற்போது ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.ஏ. துரித பரிசோதனை முறைகள் உள்ளன.

இவை துரிதப் பரிசோதனைகளாக இருந்தாலும் மூக்கு மற்றும் தொண்டை வழியாக சளியினை எடுத்து அதன்மூலம் பரிசோதனை செய்யும் முறையானது கடினமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் இதனை எளிமைப்படுத்தும் வகையில் எக்ஸ்ரேவை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முறையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானிகள் எக்ஸ்ரே மூலம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் முறையினைக் கண்டுபிடித்துள்ளனர்.

எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படும் கொரோனா பரிசோதனையானது 98% துல்லியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த எக்ஸ்ரே முறையில் ஆரம்பகாலத் தொற்று நிலையால் பாதிக்கப்பட்டவர்களைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இதனை நோய்த் தொற்றால் ஓரளவு அதிகம் பாதித்தவர்களின் பரிசோதனைக்கே பயன்படுத்த முடியும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top