பொறியியல் மாணவர்களுக்கு அடித்த ’ஜாக்பாட்’… AICTE அதிரடி உத்தரவு!!
தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிங்க்கு AICTE கோரிக்கை வைத்துள்ளது.
உக்ரைனில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வி தொடர முடியாமல் தவித்து வருவதாக AICTE கூறியுள்ளது.
இதனால் உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கனவு கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு உதவிமாறு AICTE கூறியுள்ளது.
அந்த வகையில் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்க வேண்டும் AICTE கேட்டுக்கொண்டுள்ளது.
அதே போல பொறியியல் பாடப்பிரிவில் எந்த ஆண்டு பயின்றார்களோ அதே வகுப்பில் சேர வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல் குறையும் என AICTE கூறியுள்ளது
