Connect with us

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்: அரசு அதிரடி உத்தரவு..!!!

156689 school holiday

செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்: அரசு அதிரடி உத்தரவு..!!!

கடந்த சில மாதங்களாக வரலாற்றின் உச்சமாக கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலையில் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதனால் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமென போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் வன்முறையாக வெடித்தது.

இத்தகைய சூழலில் அந்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகள் கல்வி பணிகளை தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் வாரத்தின் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் அதிபர் ரணில்  விக்ரமசிங்கே பதவியேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top