குஷியோ குஷி!! ஜன.5 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு..!!

தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாநில திட்டத்தின்கீழ் இயங்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை என்பது நாளைய தினத்தில் இருந்து துவங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல்: திமுக கவுன்சிலர் கைது!!

தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 1முதல் 5 வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக 1முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நத்தகுமார் வெளியிட்டு உள்ளார்.

மக்களே உஷார்! வரும் 25, 26ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!!

அதே போல் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி, ஜனவரி 2-ம் தேதியில் இருந்து பள்ளிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.