செய்திகள்
பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவால் அதிரும் பள்ளிகள்!!!
தற்போது நம் தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. காரணம் என்னவெனில் தமிழகத்தில் நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கும் நோய் பரவலாம் என்ற எண்ணத்தோடு இதை முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பல பள்ளிகளில் தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த சூழலில் பல நடுத்தர பெற்றோர் குடும்பத்தில் இந்த ஆன்லைன் வகுப்புகள் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது.
மேலும் பல பள்ளிகளில் கல்விகட்டணம் கட்ட வேண்டும் என்பது அவசியமாகிறது. இதனால் ஊரடங்கு காலகட்டத்தில் பலரும் வேலைவாய்ப்பின்றி இருந்த நிலையில் இது பெரும் கஷ்டத்தை கொடுக்கிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக பள்ளி கல்வித்துறை பல்வேறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த படி மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கல்வி கட்டணம் உள்பட அனைத்து பிரச்சினைகளும் பள்ளிகள் சட்டப்படி தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது. கட்டண பாக்கி வைத்துள்ளனர் என்பதற்காக மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தர மறுக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
