11 நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் இன்று (27.03.2023) திறக்கப்பட்டன.
எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், புதுச்சேரி அரசு மார்ச் 15ஆம் தேதி 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது.
39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்ற திமுக கவனம்!
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நம்மசிவாயம், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதை கருத்தில் கொண்டு, தொடக்க வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.