பொதுத்தேர்வு முடிந்தவுடன் பள்ளிகள் திறப்பு…! மாணவர்களுக்கு கோடை விடுமுறை?

இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பட்டியலை வெளியிட்டார்.

அந்த அட்டவணைப் பட்டியலில் பார்க்கும்போது மே மாதம் முழுவதும் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது. அதேவேளையில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மே 13ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடக்கப்பள்ளி கட்டாயம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பொது தேர்வு முடிந்த உடனேயே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அதன்படி 2022-2023 ஆம் கல்வியாண்டு பிளஸ்-1 தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். இதனால் மாணவர்களுக்கு இந்த முறை கோடை விடுமுறை இருக்காது என்பது தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment