ஜூலை 3வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

student-wearing-a-face-mask-as-a-preventive-against-coronavirus-wait-for-the-thermal-scanner-to-check-the-temperature

ஜூலை மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாம் என ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் அது மட்டுமின்றி அடுத்த கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளும் திறக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment