Connect with us

பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் நாளை அறிவிப்பு!

Tamil Nadu

பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் நாளை அறிவிப்பு!

7bb24f6d88902e33971ccd7389a2c9d0

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை செய்ததில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயரதிகாரிகளுடன் பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் ஆலோசனைக்கு பின்னர் அவர் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதன் பின் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top