Connect with us

கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு! கல்லூரிகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

delhi schools reopen

News

கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு! கல்லூரிகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு! கல்லூரிகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகள் திறந்து வைத்து பின்பு மிகப்பெரிய கலவரம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து பாடம் கற்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்பறைகளுக்குள் செல்ல அனுமதிக்கபடவில்லை. இதனால் அங்கு மாணவர்களுக்கு இடையே கலவரம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமூக மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் இஸ்லாமியர்கள் ஜெய்பீம் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர்.

எனவே அம்மாநில முதல்வர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

அதன்படி கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார் கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல் அளித்துள்ளார் கல்லூரிகளில் மீண்டும் அமைதி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top