Connect with us

நாளை முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu

நாளை முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

b658acb920140bb5a741ed8c33f5081b

நாளை முதல் பள்ளிகள் திறக்க உள்ளதை அடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் செப்டம்பர் 1 முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்

மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் ஐந்து வகுப்புகள் மட்டும் செயல்படும் என்றும் விளையாட்டு நேரம் கிடையாது என்றும் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் முதல் நாள் முதலே பாடங்கள் நடத்தப்பட மாட்டாது என்றும் உளவியல் ரீதியாக மாணவர்கள் தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் என்றும் பெற்றோர்கள் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top