ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

a0d2b713cd264c3c68cce6e8a30984f1

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகம் புதுவை உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே மாதம் 4 லட்சத்திற்கும் மேல் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று 40 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் தமிழகம் புதுவையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் 

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை நேரில் சந்தித்த பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் பள்ளி திறக்கப்படும் அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்திலும் மிக விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் புதுவையில் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment