கொல்லிமலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!!

நம் தமிழகத்தில் தொடர்ந்து மிதமான மழை மற்றும் கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மலைகள் அதிகம் உள்ள மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால் அங்கு மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்திற்கு மூன்றாவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகா பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மற்றொரு வட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர் மழை பெய்து வருவதால் கொல்லிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment