Connect with us

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை: கல்வி அமைச்சர் அறிவிப்பு

Tamil Nadu

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை: கல்வி அமைச்சர் அறிவிப்பு

74b5d96b5a4526a45b388a6f7a7ccefd

பள்ளிகள் இப்போதைக்கு திறக்கும் வாய்ப்பு இல்லை என புதுவை கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் பள்ளி திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் பொது கல்வி அமைச்சர் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை எவ்வாறு பரவுகிறது என்பதை பொறுத்துதான் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார் 

அதுவரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளும் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என்றும் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் ஆய்வு செய்து அதன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழகம் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பின்னர் நவம்பர் டிசம்பரில் தான் படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டு வருவதால் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top