ஒமைக்ரானின் எதிரொலி: பள்ளிகளில் இனி பிரேயர் மீட்டிங் கிடையாது; ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி!

உலகிற்கே மிகப் பெரும் அச்சத்தை கொடுத்துக் கொண்டு வருகின்ற வைரஸ் கிருமி ஒமைக்ரான் இது முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.அதன் பின்னர் உலகமெங்கும் மெல்லமெல்ல பரவிக்கொண்டு வருகிறது. ஒமைக்ரான் 5 மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஒமைக்கிரான்

நேற்றையதினம் இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்திலும் இவை பரவாமல் இருக்க தொடர் சோதனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

அதன் எதிரொலியாக பள்ளிகளிலும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான்  தடுப்பு நடவடிக்கையாக அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை கட்டாயமாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

வகுப்புகளை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவும் நடத்திக்கொள்ள பள்ளி கல்வி துறை வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூலமும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment