இனி எல்லா சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை!!! வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு?

சில மணி நேரங்களுக்கு முன்பு வரும் கல்வியாண்டில் எப்போது காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.

மேலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு..!!

இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மூன்றாம் தேதி பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை  தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க இருக்கின்ற கல்வி ஆண்டில் 2023 ஏப்ரல் 3ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் வரும் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு 2023 மார்ச் 14-ம் தேதி தொடங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

வரும் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது என்றும் கூறியுள்ளார். 2022-2023 கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் விடுமுறை என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.