தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment