கனமழை எதிரொலி: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு: தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை. இந்த ட 7 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இன்று பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் இன்று காலை முதல் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment