Connect with us

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

delhi schools reopen

செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

கர்நாடகாவில் பல நாட்களுக்குப் பின்பு பிப்ரவரி 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்க பட்டது. ஆனால் அன்றைய தினமே கர்நாடக மாநிலத்தில் கலவரம் உண்டாக்கியது. ஏனென்றால் எப்போதும் போல இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

அவர்களை ஹிஜாப் அணிய கூடாது என்றும் ஹிஜாப் அணிந்தவர்களை வகுப்பறைகளுக்கு அனுமதிக்காமல் தடுத்தனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் இரு பிரிவினராக மாணவர்களிடையே கடும் போராட்டம் நிலவியது.

ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. அதுவும் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் முதல் கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி கர்நாடகாவில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஹிஜாப், காவி துண்டு சர்ச்சையால் கடந்த வாரம் விடுமுறை விடப்பட்ட நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top