சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்; பள்ளிகள் இனி அரைநாள் மட்டுமே செயல்படும்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் அதிதீவிரமாக கனமழை பெய்தது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், அணைகள் முழுவதும் தனது கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் வருகிற ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் பலரும் கருத்து கூறினர். அதன்படியே தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இவ்வாறு உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து உள்ள நிலையால் அங்கு இன்று முதல் பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
இதேவேளையில் தமிழகத்தில் மே 13ஆம் தேதிதான் பள்ளியின் கடைசி வேலை நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் பள்ளிகளின் கடைசி வேலை நாள் மாற்றப்படும் என்றும் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
