News
பள்ளி கல்லூரிகள் அடுத்த ஆண்டுதான் திறக்கப்படும்: அண்டை மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன என்பதும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என சமீபத்தில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்திருந்தார். இருப்பினும் தமிழக அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவித்தது இருப்பினும் பள்ளி கல்லூரி திறக்க தொடர்ந்து தடை என்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இந்த ஆண்டு டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அடுத்த ஆண்டுதான் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தை விட பல மடங்கு குறைவாக கொரோனா பாதிப்பு இருக்கும் கேரளாவிலேயே அடுத்த ஆண்டுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற நிலையில் இந்தியாவிலேயே மூன்றாவது அதிக பாதிப்பு உள்ள தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்து உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
