நாளை எத்தனை மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இன்றும் கூட ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை என்றும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளன

சற்று முன் வெளியான தகவலின்படி நாளை மதுரை, இராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் 4 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment