சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை காரணமாக நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் இன்று முதல் நாளை வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து சற்று முன்னர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை போலவே ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சற்று முன் வெளியான தகவலின்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின்படி அம்மாவட்டத்திலும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கனமழை காரணமாக வேறு எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment