கனமழை எதிரொலி: சென்னை உள்பட 11 மாவட்ட பள்ளிகள் விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதும் ஒரு சில அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print