விஷம் குடித்து தற்கொலை செய்வதை இன்ஸ்டாவில் நேரடி ஒளிபரப்பு செய்த தமிழக சிறுவன்.. நேரில் சென்று பார்த்தபோது டிவிஸ்ட் ..!

தமிழகத்தில் திருவள்ளுவர் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பில் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் நேரில் சென்று பார்த்தபோது கிடைத்த டிவிஸ்ட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பல காமெடியான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தாலும் ஒரு சில ஆபத்தான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருவள்ளுவரை சேர்ந்த 16 வயது சிறுவன் தான் கொசு மருந்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதாக இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பில் கூறினார்.

இது குறித்து தகவல் காவல்துறைக்கு கிடைத்தவுடன் அந்த சிறுவன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க பேஸ்புக் நிறுவனத்தை அணுகியதாகவும் அந்நிறுவனம் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுவன் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

விஷம் என்று பாட்டிலில் எழுதப்பட்டிருந்தாலும் அந்த சிறுவன் குடித்தது வெறும் தண்ணீர் என்றும், இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் கிடைப்பதற்காக அந்த சிறுவன் நடத்திய தற்கொலை நாடகம் என்பதும் அதன் பிறகு தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுவனை எச்சரித்து அவனை பெற்றவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர் அந்த சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இது ஒரு கேலிக்கூத்தாக இருந்தாலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார் என்று செய்தி வந்தவுடன் காவல்துறையினர் உடனடியாக பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொறுப்புள்ள பணியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் தற்கொலை நாடகமாடிய சிறுவனுக்கு கண்டனங்கள்  குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.