பள்ளி மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் சக மாணவர் உயிரிழப்பு- கோவையில் பயங்கரம்

கோவை ஆலாந்துறையி  உள்ள அரசு பள்ளி ஒன்றில்  பிளஸ் 1 வகுப்பு படித்து வரும்  மாணவர் ஒருவருக்கும், அ அந்த பள்ளியில் ஏற்கனவே படித்து தற்போது ஐடிஐ படித்துவரும் மாணவர் ஒருவருக்கும்  கடந்த 6-ம் தேதி பயங்கர தகராறு ஏற்பட்டது.

அவர்களுக்கு ஆதரவாக இரு தரப்பிலும் மாணவர்கள் திரண்டு மோதிக்கொண்டனர். இதில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 3 பேர் கத்திக்குத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கு குறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில்  ஐடிஐ மாணவனையும் அவனின் நண்பர் ஒருவரையும் கைது செய்த நிலையில்  ஐடிஐ மாணவர் ஒருவரை கிண்டல் செய்ததாக பிளஸ் 1 மாணவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த  பள்ளி மாணவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை முன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஸ்கோர்ஸ் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment