
Tamil Nadu
பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு..!!
தற்போது நம் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் அவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் கூறியுள்ளார்
