ஸ்கூல் ரீ ஓபன்:வாங்க வாங்க அன்பு குழந்தைகளே! வரவேற்கும் முதலமைச்சர்!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர்  ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.ஸ்டாலின்

அதன்படி நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.

1.5 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பள்ளி சார்ந்த கற்றலில் ஈடுபட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மாணவர்கள் அந்தந்த வகுப்பு புதிய திறன்களை முழுமையாக அடைய முடியாத நிலை இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதலமைச்சரின் வரவேற்பை ஏற்று வருகின்ற திங்கட்கிழமை முதல் குழந்தைகள் மிகவும் உற்சாகமாக பள்ளிக்கு செல்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment