Connect with us

பள்ளி முதல்வர், தாளாளர் கைது!! மாணவி மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

kaithu 1

தமிழகம்

பள்ளி முதல்வர், தாளாளர் கைது!! மாணவி மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

வன்முறை நடந்த கனியாமூர் பள்ளியில் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

டி ஐ ஜி மற்றும் எஸ்.பி உள்ளிட்ட 52 காவலர்கள் வன்முறையின் போது காயமடைந்தனர் என்றும் கூறினார். கனியாமூர் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக எழுபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேலும் பள்ளியின் முதல்வர், தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. மாணவியின் இறப்பில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று டிஜிபி கூறியுள்ளார்.

அனைத்து கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்றும் கூறினார். பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் குற்றப்பிரிவு விசாரணை இருக்கும் என்றும் கூறினார்.

மாணவி மரணம் தொடர்பான வழக்கு தனியாகவும், பள்ளிக்கூடம் தாக்கப்பட்ட வழக்கு தனியாகவும் விசாரணை நடத்தப்படும். பள்ளிக்கூடத்தை தாக்கியவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்றும் விசாரணை நடைபெற்று கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top