இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

delhi schools reopen

இந்த நிலையில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதுபோன்று நம் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்க உள்ள நிலையில் ஒன்று விட்டு ஒரு நாள் மட்டுமே இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை எனவும் பெற்றோர் அனுமதி கடிதம் தேவை எனவும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அரைநாள் இயங்கிவந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு இன்று முதல் முழு நேர வகுப்புகள் நடைபெறும் என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment