Connect with us

கோர விபத்து!! சிலிண்டர் லாரி மீது பள்ளி வேன் மோதியதில் 10 குழந்தைகள் காயம்!!!

accident 1

தமிழகம்

கோர விபத்து!! சிலிண்டர் லாரி மீது பள்ளி வேன் மோதியதில் 10 குழந்தைகள் காயம்!!!

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பள்ளி வாகனம் ஒன்று சிலிண்டர் லாரி மீது மோதி 10 குழந்தைகள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே பெருமாள் பட்டி என்ற விளக்கில் புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சிலிண்டர் லாரி வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தனியார் வாகனம் ஒன்று திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த சிலிண்டர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் காயம் அடைந்துள்ள நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த வாகனத்தை ஆய்வு நடத்தியதில் பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஏற்கனவே இந்த பள்ளிவாகனத்தில் பயணம் செயத 2 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top