இனி மாதந்தோறும் அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கட்டாயம்..!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அசாம்பாவிதங்கள் அதிகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதற்கு நல்லது உதாரணமாக அமைந்தது ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரம்.

இந்த கலவரத்தின் விளைவாக கலவரம் நடந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வாகனங்கள் தீவைக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் மாற்று சான்றிதழ்களும் கிழிக்கப்பட்டது.

தனியார் பள்ளியிலேயே இவ்வளவு என்றால் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளின் செயல்பாடுகள் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாதம் தோறும் பள்ளி மேலாண்மை குழு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு நடத்துவதற்கான வழிமுறைகளையும் தற்போது வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை கூட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. 50 சதவீத பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment