நாளை பள்ளிகளுக்கு விடுமுறை : இலங்கை கல்வி அமைச்சகம் அறிவிப்பு !!
இலங்கையில் கடந்த சில வாரங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையினை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது
இந்நிலையில் எரிபொருட்கள் கூட வாங்க முடியாத நிலை உருவாகி இருப்பதால் இலங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாளோன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மின் இணைப்பு கிடைக்காமல் அவதி படுவதால் ஒட்டுமொத்த மக்களும் இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இந்த சூழலில் கடந்த 2ம் தேதி மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
மேலும், வடக்கு, தெற்கு, வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
