தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால்
1 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் நாளை மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி பள்ளி மேலாண்மை குழுக்கள் கூட்டம் நாளை (ஏப்ரல்23) நடைபெற உள்ளது.
இதனால் தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் என்றும் மற்ற 9 முதல் 12 வரையிலான மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிகளுக்கு வரவேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.