தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை !! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பிற்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 14- ஆம் தேதி ( வியாழக்கிழமை)  தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்படுவதால்  அன்றைய  தினத்தில் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

அதே போல அடுத்த நாள் ஏப்ரல் 15-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கொண்டாடும் புனித வெள்ளி என்பதால் அன்றைய தினமும் அரசு பொது விடுமுறை அரசு தெரிவித்துள்ளது .

இந்நிலையில் ஏப்ரல் 16-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாள் என்பதால் அன்றைய தினமும் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் வருகின்ற 16- ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment