கனமழை! புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடல்போல் காட்சியளிக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாளைய தினத்தில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment