Connect with us

வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில்; நாளை முதல் ஐந்து நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!!

school leave

செய்திகள்

வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில்; நாளை முதல் ஐந்து நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!!

வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில்; நாளை முதல் ஐந்து நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!!

நம் தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன்விளைவாக நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து கூறியிருந்தனர்.

அதன் எதிரொலியாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் உச்சம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மே மாதம்தான் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதனால் கோடை கால விடுமுறை ஆனது சற்று குறைவாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நம் தமிழகத்தை விட அதிக அளவு ஒடிசா மாநிலத்தில் தீவிரமாக பெய்தது. அதன் எதிரொலியாக அங்கு வெயிலின் தாக்கமும் இயல்பை விட அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் ஒடிசா மாநில அரசு தற்போது அதிரடி உத்தரவினை அறிவித்துள்ளது. அதன்படி ஒரிசா மாநிலத்தில் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூட ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று மாநில அரசு கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top