Connect with us

கனமழை எதிரொலி: இன்று 2 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!!!

School Leave

தமிழகம்

கனமழை எதிரொலி: இன்று 2 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!!!

கடந்த ஒரு வாரத்திற்க்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு பகல் பாராமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது..

இந்நிலையில் இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் சில தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையின் வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு மாணவர்களின் நலன் கருதி இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top