#Breaking மழை விடுமுறை ரத்து; திருவாரூர் ஆட்சியர் திடீர் உத்தரவு!

கனமழை காரணமாக திருவாரூர், நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை கனமழை பெய்ததால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு காரங்களுக்காக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, வடுவூட், எடமேலையூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து, வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

எனவே திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

ஆனால் மாணவர்களுக்கு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு விடுமுறையை ரத்து செய்வதாக சற்றுமுன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment