கடந்த மாதம் ஜூலை 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் படிக்கும் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு மரணம் தொடர்பான இறுதி அறிக்கை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.