Connect with us

ஒரு தலை காதல்..!! நடுரோட்டில் பள்ளி மாணவி எரித்து கொலை..!!

கருகிய நிலையில் உயிரிழப்பு

செய்திகள்

ஒரு தலை காதல்..!! நடுரோட்டில் பள்ளி மாணவி எரித்து கொலை..!!

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களைப் பொறுத்தவரையில் ஒருதலை காதலால் விபரீதங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காதலை ஏற்க மறுத்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் அங்கிதா குமாரி என்ற அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாருக் என்ற இளைஞர் மாணவியை தலையாக காதலித்து வந்துள்ளார்.

கைது

இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெற்றோலை ஊற்றி சிறுமியை தீ வைத்து எரித்துள்ளார். இதனிடையே மாணவி 90 சதவீத தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில் மாணவியை எரித்து கொன்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 23 கைது செய்யப்பட்டார்.

fire

தற்போது மாணவி உயிரிழந்த செய்தியை அறிந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top