முதல்ல இந்த பழக்கத்த விடுங்கள்… தேர்வுக்கு தயாரும் மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அட்வைஸ்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்
மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தொடர்பாகவும் அரசின் பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வரும் சாதனைகள் தொடர்பாகவும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் +2 வகுப்பு பொது தேர்வு எழுத கூடிய மாணவர்கள் விடிய விடிய படித்து உடல்நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், விடிய விடிய படித்து தேர்வு அறையில் தூங்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் .

மாணவர்கள் நேரத்திற்கு படித்து ஓய்வெடுத்து பின்னர் தேர்வு எழுத வேண்டும் எனவும் கூறினார். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு முடிந்த பிறகு தொடர்ச்சியாக மாணவருக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்தது மாணவர்கள் ஓய்வு எடுப்பதற்காக மட்டுமே என்றார்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு என்பது வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய தேர்வு என்பதால் தைரியமாக மாணவர்கள் தேர்வை எழுதுங்கள் என அறிவுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.