உடனே போங்க… பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாறுதல் வழங்கப்பட்ட பள்ளியில் உடனே சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உடனடியாக பணிக்கு சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், தற்போது பணியாற்றிவரும் பள்ளியில் இருந்து விலகி, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், பணி ஆணை கிடைக்கப்பெற்றும் அதே பள்ளியில் ஆசிரியர்கள் தொடர்ந்தால், அப்பள்ளியை சார்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment