பெற்றோர்களே உஷார்… பள்ளிக் கல்வித்துறை கொடுத்த அட்வைஸ்!

பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அனுப்பும் போதுபெற்றோர்‌ மற்றும் பாதுகாவலர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளை பள்ளி வாகனத்தில்‌ பள்ளிக்கு அனுப்பும்‌ பெற்றோர்‌/ பாதுகாவலர்‌ அவர்களுடன்‌ வந்து வாகனத்தில்‌ ஏற்றி அமரவைத்துவிட்டு வாகனம்‌ இயக்கப்பட்ட பின்னர்‌ அந்த இடத்தினைவிட்டுச்‌ செல்ல வேண்டும்‌.

பள்ளியிலிருந்து குழந்தைகள்‌ வரும்‌ நேரத்திற்கு முன்பாகவே உரிய நிறுத்தத்திற்கு வந்து குழந்தைகள்‌ வாகனத்திலிருந்து இறங்கும்போது அவர்களது கையைப்‌ பிடித்து இறக்கி வாகனத்தை விட்டுப்‌ பாதுகாப்பான தொலைவில்‌ நிறுத்திக் கொள்ள வேண்டும்‌.

வாகன ஓட்டுநர்கள்‌ சரியான முறையில்‌ வாகனத்தை இயக்குகிறார்களா என்பதைக்‌ கண்காணித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல்‌ தெரிவிக்க வேண்டும்.

‌வாகனத்தில்‌ உதவியாளர்‌ உடன்‌ வருகிறார்களா என்பதை உறுதிசெய்து அவ்வாறு உதவியாளர்‌ நியமிக்கப்படவில்லை எனில்‌ அதுகுறித்து போக்குவரத்துத்‌ துறை அலுவலர்களுக்கும்‌ கல்வித்‌ துறை அலுவலர்களுக்கும்‌ புகார்‌ அளிக்க வேண்டும்.

‌பள்ளி நிர்வாகங்கள்‌ வாகனங்களை இயக்கினாலும்‌ அவற்றை முறையாகக்‌
கண்காணிக்கும்‌ வாய்ப்பு பெற்றவர்கள்‌ பெற்றோர்கள்‌ என்பதால்‌, பள்ளி வாகனங்கள்‌ பாதுகாப்பாக இயக்கப்படுவதை கண்காணித்து உறுதிசெய்ய
வேண்டும்‌.

பெற்றோர்களுக்கு உண்டான அறிவுரைகளை பள்ளியில்‌ நடைபெறும்‌ பெற்றோர்‌
ஆசிரியர்‌ கூட்டத்தில்‌ தவறாது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள்‌ தெரிவித்து
அதற்கான அறிக்கையினை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க
வேண்டும்‌.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment