#Breaking அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி… காரணம் இதுவா? – மருத்துவர்கள் அறிவுரை!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை 2 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகே அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலைக்குறித்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் எந்த வித அறிக்கையையும் வெளியிடாத நிலையில், காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை நிலவரம் என்ன, என்ன மாதிரியான காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment