மாணவ,மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு: 3ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்!

நம் தமிழகத்தில் நாளை தினமும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் இன்றைய தினமே மாணவர்கள் உற்சாகமாக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் நாளை ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசும், பள்ளிகல்வித்துறையும் அறிவித்துள்ளது.

அதோடு கல்லூரி மாணவர்களுக்கு நாளைய தினம் முதல் கல்லூரி திறக்கப்படும். இருப்பினும் முன்னர் அறிவித்தபடி செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஓரளவு சந்தோஷத்தில் காணப்படுகின்றனர்.

மற்றொரு மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகள் திறக்க அம்மாநில முதல்வர் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மேற்கு வங்கத்தில் பள்ளி கல்லூரிகள் வருகின்ற 3ஆம் தேதி முதல் திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

ஏனென்றால் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இத்தகைய அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு உணவு விடுதிகள், திரையரங்கங்களில் 75 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment